அதிரை பிறையை முடக்கிய அதிரை எக்ஸ்பிரஸ்!

அதிரை பிறையை நேற்று முன்தினம் அதிகாலை 4:30 மணியளவில் அதிரை எக்ஸ்பிரஸ் குழுவை சேர்ந்த  ஒருசிலர் முடக்கம் செய்தனர். அதன் பிறகு நேற்று முன்தினம் முழுவதும் எங்கள் அதிரை பிறை குழுவினர் தொடந்து அந்த முடக்கத்தை அகற்ற செயல்பட்டோம். தொடர்ந்து செயல்பட்டும் நேற்று முன்தினத்திற்குள்  சீர்திருத்த இயலவில்லை. அந்த முடக்கத்தை அகற்ற நேற்று காலையிலும் தொடர்ந்து செயல்பட்டோம். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியை கொண்டு, அதை நேற்று பகல் 12:30 மணியளவில் அகற்றினோம்.
எங்களை முடக்கம் செய்த அதிரை எக்ஸ்பிரஸ்:
நேற்று முன்தினம் நாங்கள் பதிந்த ஒரு செய்தியை அதிரை எக்ஸ்பிரஸ், ஒரு அச்சு அசல் கூட மாறாமல் சின்ன குழந்தையை போல காப்பி செய்து அவர்களது தளத்தில் பதிந்தனர். இதன் காரணமாக நாங்கள் அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அதிரை எக்ஸ்பிரஸ் குழுவை சேர்ந்த ஒருவர் எகத்தாளமாக பதில் அளித்துமுள்ளார். இது முதல் முறை அல்ல. இதை போல் பல முறை தொடர்பு கொண்டபோதும் எகத்தாளமாக பதில் அளிக்கின்றனர். 
ஆகையால் அதிரை பிறை ADMIN ஜெ. நூருல் அஹமது whatsapp இல் அனைத்து குரூபிலும், இந்த காப்பி அடித்த செய்தியை பதிந்திந்தார். இந்த செய்தியை அதிரையை சேர்ந்த ஒருவர் share செய்துள்ளார். அவர் Share செய்த காரணத்தால் அவரது  செல்போனில் அனைத்து விபரங்களும் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை பிறை முடங்கிய செய்தியையும், அவரது செல்போனில் அனைத்து விபரங்களும் அளிக்கப்பட்ட செய்தியையும் தொடர்புடையது போன்று வெளியிட்டனர்.
அதிரை பிறை யின் டொமெய்ன் ஐடிக்குள் அனாகரிகமான முறையில் சென்று இணையதளத்தை முடக்கம் செய்தனர் அதிரை எக்ஸ்பிரஸ்.

அவர்களே எங்களை   முடக்கம் செய்து விட்டு, அவர்களே அவர்களது இணையதளத்தில், அதிரை பிறை முடக்கம் என பதிந்துள்ளனர். நாங்கள் முடக்கத்தை அகற்றியதும், அதிரை பிறை முடக்கம் அகற்றம் எனவும் அதிரை எக்ஸ்பிரஸ் பதிந்தனர்.
இது குறித்து அவர்கள்  எகத்தாளமாக எந்தவொரு அனுமதியுமின்றி அவர்களது தளத்தில் பதுந்துள்ளனர். 
இது மட்டுமின்றி அதிரை எக்ஸ்பிரஸ் குழுவை சேர்ந்த ஒருவர் ‘ஃபேஸ்புக்கில்’ அதிரை பிறையை படிக்கத்தெறியாவர்கள் எனவும் பதிந்துள்ளார். அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்த status-சை புகைப்படத்தில் காணலாம்.
அதிரை பிறை முடக்கத்தை அகற்றியவர் முஹம்மது ஜாஃபர். முடக்கம் செய்தவர் யார் என கண்டறிந்தவர் அதிரையை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close