அதிரை பிறையின் கோரிக்கையை ஏற்று ஒற்றுமையை நிலைநாட்டிய சகோதர தளங்கள்!

அதிரை பிறையில் 12 ஆம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெரும் மாணவர்கள், பள்ளிகள் குறித்த பதிவுகளை வெளியிடப்போவதில்லை என அறிவித்து இருந்தோம்.

அதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு… நாளை +2 சாதனையாளர்கள் செய்தியை வெளியிடமாட்டோம்!

இதே போல், மற்ற சகோதர வலைதளங்களும் அதனை புறக்கணித்தால் நமதூர் பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிலவும் மதிப்பெண் மோகத்தை கட்டுப்படுத்தலாம் எனவும் கோரிக்கை விடுத்திருந்தோம். அதன் அடிப்படையில் இன்று அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை நியூஸ் ஆகிய சகோதர வலைதளங்கள் நமது கோரிக்கையை ஏற்று தேர்வு முடிவுகள் குறித்த பதிவுகளை வெளியிடாமல் ஆதரவளித்தன.

மாணவர்களின் நலன் கருதி நமது கோரிக்கையை ஏற்ற சகோதர வலைதளங்களுக்கு அதிரை பிறையின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Close