அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் பிரபலங்கள் பங்கேற்ற பட்டிமன்ற நிகழ்ச்சி!

காதிர் முஹைதீன் கல்லூரியில் இன்று (23.10.2017) தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி கவிஞர் அண்ணா சிங்காரவேலு தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ் பழனி கலந்து கொண்டார்.

இதில் சாதாரண மனிதர் சாதனையாளராக மாற்றுவது குடும்ப சூழலா சமூக சூழலா என்கிற தலைப்பில் காரசாரமான உரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


Close