Adirai pirai
CLIMATE உள்ளூர் செய்திகள்

திடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி!

தென்மேற்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் அதிரையில் மட்டும் அதற்கான எந்த தடங்களும் தென்படவில்லை. தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்ததால் மக்கள் சோகமடைந்த நிலையில் காணப்பட்டனர். இந்த நிலையில் இன்று இரவு 7:30 மணியளவில் அதிரையில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை தொடர்ந்து நீடித்தால் ஊரில் நிலவும் வெப்பம் தணியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.