Adirai pirai
islam தமிழகம்

ஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த சாதிக் பாட்சா!

இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் தண்ணீர் இன்றி கடும் துயரத்தில் தவித்து வந்தனர். இவர்களுக்கு உதவ அரசும், ஆட்சியாளர்களும் முன்வராத நிலையில், சாதிக் ராஜா என்ற நபர் பெரும் ய்தவியை செய்துள்ளார். தண்ணீர் பஞ்சத்தால் ஏழைகள் படும் துயரத்தை துடைக்க ₹20 லட்சம் செலவில் 1250 அடியில் போர் போட்டு கொடுத்துள்ளார். இதில் வந்த தண்ணீரை அப்பகுதியை சேர்ந்த ஏழை மக்கள் மகிழ்ச்சியுடன் பிடித்து அருந்தினர். அத்துடன் தங்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்த சாரிக் பாட்சாவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

பணத்தை முக்கியமாக கருது மக்களுக்கு மத்தியில், இப்படி கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் மனிதநேயம் கொண்ட சில நல்ல மனிதர்களை கண்டு நமக்கும், இது போல் இயன்ற சேவையை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்க வேண்டும்.