Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செல்லும் அதிரை பள்ளி மாணவர்கள்!

அதிரையை அடுத்துள்ள உள்ளூர் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது பிரில்லியண்ட் CBSE பள்ளி. இங்கு அதிரை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் அங்கு படிக்கும் பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு அறிவியல் சுற்றுலாவுக்காக அழைத்து செல்லப்பட்டனர். அதே போல் 2வது முறையாக இந்த ஆண்டும் பள்ளி மாணவர்கள் நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.