Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையிலிருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த CBD அமைப்பினர்!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிதியுதவியும் நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அதிரையில் கிரெசெண்ட் பிளட் டோனார்ஸ் அமைப்பில்பு சார்பாக மக்கள் மத்தியிலும், வியாபார ஸ்தலங்களிழும் நிதி மற்றும் நிவாரண உதவிகள் சேகரிக்கப்பட்டன. இதில் அதிரை மக்கள் வழங்கிய அத்தியாவசிய உதவி பொருட்களான அரிசி, முட்டை போன்ற உணவு வகைகள் உள்ளிட்டவை டெம்போ மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.