Adirai pirai
islam தமிழகம்

BREAKING NEWS: நெல்லை செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கலவரம்… இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இன்று மாலையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கு பகுதிகளில் முன்னேற்பாட்டுடன் ஆயுதங்கள் கற்கள் ஆகியவற்றோடு ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினர் செங்கோட்டை மேலூர் பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களின் சொத்துக்களை சூறையாடியும் சில முஸ்லிம்களை தாக்கியும் உள்ளனர். இதற்கு சிலர் பதில் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்ததில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் செங்கோட்டையில் ஊர்வலம் நடைபெறும் என்றும், முதல் நாள் பூஜை ஊர்வலம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். ஆனால் இந்த ஊர்வலம் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் எந்த ஆண்டும் நுழையாத நிலையில் இன்று நுழைந்ததாக தெரிவித்துள்ளனர். அப்போது முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வாகனங்களை ஊர்வலம் சென்றவர்கள் சேதப்படுத்தியதாகவும் கூறியுள்ளனர். இந்த ஊர்வலம் எந்த போலீஸ் பாதுகாப்பும் இன்றி நடந்திருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.