அதிரையை சுத்தமான நகராக இன்று நடைபெற்ற கருத்தரங்கம்!

அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் நடத்தப்பட்ட “தூய்மை அதிரையை உருவாக்குவோம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் இன்று காலை அதிரை கதீஜா மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

முதலாவதாக சிறப்பு விருந்தினர்க்கு நினைவு பரிசு வழங்கப்படது. பிறகு சுற்றுச் சூழலை அதாவது பிளாஸ்டிக் உபயோபடுத்துவதால் ஏற்ப்படும் தீமைகளை பற்றியும், மக்கும் குப்பை, மக்கா குப்பை இவைகளினால் எற்ப்படும் நன்மை தீமைகளைப் பற்றியும் இக்கருத்தருங்கி விரிவாக சுற்றிக் காட்டப்பட்டது.

(Projector) ஒளி பதிவு மூலம். திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் திருப்பூரில் எப்படி குப்பைகளை பிரித்து அதன் அதன் பயன்பாட்டிற்கு தேவையானதை மீண்டும் தயாரிக்க படுவதையும் விளக்கிக் காட்டினார்கள்.

ஹார்ஃபோனிக் முறையில் தயாரிக்கப் பட்ட பிளாஸ்ட்டிக் பை மாதிரியான பையையும் காட்டி இது தண்ணீரில் போட்டவுடன் கரைந்து போவதையும் செயல் வடிவில் செய்தும் காட்டியது அரங்கில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..

மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியே பிரிப்பதுடன் எலக்ட்ரானிக் குப்பைகளை எப்படி கையாள்வது மறு சுழற்சி என இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான பல கருத்துக்களை இங்கு பதிய வைத்தனர்.

இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் இறுதியாக இது தொடர்பாக கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களிடம் கருத்துக்களை பதிய செய்தனர்.

இந் நிகழ்ச்சி 1: 30 மணிக்கு முடிவுற்றதும் லுஹர் தொழுகை ஜமாத் தொழுகையாக அங்கேயே நடைப் பெற்றது.

Close