பட்டுக்கோட்டை வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி… மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்களின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பட்டுக்கோட்டையை அடுத்துள்ள ஆலத்தூரில் வரும் 26-10-2017 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

முதலமைச்சர் வருகையை ஒட்டி பட்டுக்கோட்டையில் திருமண ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்  மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், அதிமுக பட்டுக்கோட்டை நகர செயலாளர் சுபராஜேந்திரன்  மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Close