காணாமல் போன அதிரை மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய MLA C.V.சேகர் (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முனியாண்டி. மீனவரான இவர் நேற்று அதிகாலை அதிரை கடலில் இருந்து நாட்டுப்படகு மூலம் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். இந்த நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர் இதுவரை வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர். மீனவர் முனியாண்டியை கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் முனியாண்டி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடனடி நடவடிக்கையாக கடலோர மீட்பு படையினரை விரைந்து சென்று காணமல் போன முனியாண்டியை தீவிரமாக தேடும் படி உத்தரவிட்டார். அத்துடன் சம்பவம் நடந்த கடலோர பகுதிக்கு சென்றும் அவர் பார்வையிட்டார். அப்போது அதிமுக நகர செயலாளர் பிச்சை, துணை செயலாளர் அஹமது தமீம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Close