Adirai pirai
video உள்ளூர் செய்திகள்

அதிரையில் சாலை அமைப்பதில் ஊழல் நடைபெற்றதா? அதிரை பிறையின் EXCLUSIVE செய்தித்தொகுப்பு..! (வீடியோ இணைப்பு)

கடந்த அக்டோபர் மாதம்,  அதிரை 14-வது வார்டு காலியார் தெரு – வெற்றிலைக்காரத் தெருவை இணைக்கும் சந்துப் பகுதி மற்றும் காலியார் தெருவிலுள்ள குறுகலான 4 சந்துப் பகுதிகளில் ரூ. 4.30 லட்சம்  செலவில், பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டன. இந்த சாலை அமைக்கப்படும் நேரத்தில் நமது தளத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், கடந்த காலங்களில் இந்த சாலைகளினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் விளக்கி இருந்தோம்.

இந்த நிலையில், இந்த சாலை அமைக்கப்பட்டு ஒரு மாதம் பூர்த்தி ஆகாத சூழலில் சாலையின் பல பகுதிகள் உடைந்து பள்ளம் மேடாக காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து நமது அதிரை பிறை சார்பாக நேரடியாக கள ஆய்வு செய்து வெளியிட்டுள்ள வீடியோ தொகுப்பு உங்களுக்காக….