Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை காந்திநகரில் தீ விபத்தால் வீடுகளை இழந்த இரண்டு குடும்பத்தினருக்கு திமுகவினர் நிதியுதவி!

அதிரை காந்திநகரில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. இதனை அடுத்து இன்று காலை அதிரை பேரூர் கழக திமுக செயலாளர் இராம.குணசேகரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், துணைச்செயலாளர் அன்சர்கான், ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் அஹமது ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் பேரூர் கழக திமுக சார்பில் அவர்களுக்கு ரூ.5000 நிதியுதவி வழங்கப்பட்டது.