Adirai pirai
posts

FLASH NEWS: ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..! (வீடியோ இணைப்பு)

ஜப்பான் பெரும்பாலும் அதிக தீவு அமைப்புகளை உடைய பசிபிக்குப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படும் ஜப்பான் பல சிறப்பு அம்சங்களை பெற்றாலும் அடிக்கடி இயற்கை பேரிடர்களுக்கு அவதிப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியாவது சர்வசாதாரண நிகழ்வாக கருதப்படுகிறது.

தெற்கு பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.திடீரென ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின,பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.