தாமரை இந்தியாவின் தேசிய மலர் இல்லை… RTI மூலம் உண்மை வெட்ட வெளிச்சமானது..!

நாடு முழுவதும் இந்தியாவின் தேசியமலர் தாமரை என்று நம்பப்பட்டு வந்தது. பள்ளிப் புத்தகங்களிலும் தாமரை தேசிய மலர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஐஸ்வர்யா பராஷர் என்பவர், தாமரை தேசிய மலராக அறவிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்திய தாவரவியல் ஆய்வு மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஆய்வு மையம் தாமரை தேசிய மலர் அல்ல என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவுக்கு தேசிய மலர் என்று ஒன்றே இல்லை என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றது முதல் இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்று கருதப்பட்டு வரும் நிலையில் இந்திய தாவரவியல் ஆய்வு மையத்தின் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு தகவல் தொடர்பு ஊடகங்களில் தாமரை குறித்த தவறான தகவல்களை உடனே அகற்ற வேண்டும் என்றும் இந்திய தாவரவியல் ஆய்வு மையம் கோரிக்கை விடுத்துள்ளது

Close