மதுக்கூர் மைதீன் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..!

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீனை நேற்று இரவு 8:20 மணியளவில் சிவக்கொல்லை பகுதியில் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அவர் தஞ்சை கொண்டு செல்லப்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்தும் பல கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Close