Adirai pirai
Crime POLITICS உள்ளூர் செய்திகள்

BREAKING NEWS: மதுக்கூர் மைதீனுக்கு அரிவாள் வெட்டு… பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…!

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீனை இன்று இரவு 8:20 மணியளவில் சிவக்கொல்லை பகுதியில் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அவர் தஞ்சை மீனாட்சி மிசன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இதையடுத்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதில் அவருக்கு கை, கழுத்து, தலை பகுதிகளில் பலத்த வெட்டுக்கள் விழுந்து அதிகளவில் இரத்தம் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.