அதிரை பிறையில் இனி நீங்களும் நேரடியாக செய்தி பதியலாம்!

அதிரை பிறை துவங்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த காலங்களில் நமது தளம் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளின் மூலமாக வாசகரகள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. இந்த நிலையில் இது வரை எந்த தளங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டாத ஒரு வசதியை நமது அதிரை பிறை நாம் அறிமுகம் செய்துள்ளோம். அதாவது, இனி தங்களுக்கு கிடைத்த செய்திகளை, தங்கள் பகுதியில் உள்ள புகார்களை தாங்களே அதிரை பிறை இணையதளத்தில் நேரடியாக பதிவிடலாம்.

அதிரையர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்காகவும், உங்கள் செய்திகளை உடனுக்குடன் வெளிபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிரை பிறை தளத்தில் இந்த புதிய தொழில்நுட்ப மேம்பாட்டினை நாம் மேற்கொண்டுள்ளோம். அதிரை பிறையை கணினியில் பயண்படுத்துபவர்கள் மேலே மெனுவின் வலது புற ஓரத்தில் உங்களுக்கானது என்ற பட்டனில் கர்சரை வைத்திலால் அதில் நீங்களும் செய்தி பதியலாம் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும் . அதில் உள்ளவற்றை பூர்த்தி செய்து உங்கள் பதிவை வெளியிடலாம்.  அது போன்று ஸ்மார்ட் போன் பயணர்கள் தளத்தின் மேலே இடது புறத்தில் உள்ள மூன்று கோடுகளை அழுத்தினால் ஒரு மெனு திறக்கும். அதில் உங்கள் செய்தியினை மேற்குறிப்பிட்ட ஆப்சன்களை கிளிக் செய்து பதிவிடலாம்.

செய்தி பதிவிட்ட பிறகு திரையில் காணப்படும் எண்ணுக்கு தொடர்பு கொண்டு நெறியாளரிடம் உங்கள் செய்தி குறித்து தெரியப்படுத்தினால், சிறிது நேரத்திற்குள் செய்தி வெளியிடப்படும்..

இந்த புதிய தொழில்நுட்ப மேம்பாடு உங்கள் யாவரையும் கவரும் என நாங்கள் நம்புகிறோம்.

MOBILE STEP-1
MOBILE STEP-2
MOBILE STEP-3
STEP-4

 

COMPUTER – STEP1
COMPUTER STEP2
COMPUTER – STEP3
Close