Adirai pirai
islam sports உலகம்

UFC சண்டையில் இஸ்லாத்தை விமர்சித்த அயர்லாந்து வீரன்… அடித்து வீழ்த்திய ஹபீப்!

அமெரிக்காவில் சர்வதேச புகழ்பெற்ற யு.எப்.சி சண்டையில் 80 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், ரஷியாவின் ஹபீபை எதிர்த்து அயர்லாந்தின் கோனர் மெக்கிரகர் மோதினார். இந்த போட்டிக்கு முன்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது யூத வீரரான கோனர் மெக்கிரகர் ஹபீபின் இஸ்லாம் மதத்தையும், அவரது தந்தையையும் தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது.

இத்தகைய பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று போட்டி பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியது. இதில் நாவால் நோவினை செய்த அயர்லாந்து யூத வீரர் கோனர் மெக்கிரகரை ஹபீப் அடித்து துவம்சம் செய்தார். ஹபீபின் அடியை தாங்க முடியாமல் கோனர் மெக்கிரகர் தோல்வியை ஒப்புக்கொண்டதால் ஹபீப் யு.எப்.சி சாம்பியன் பட்டம் வென்றார்.

போட்டி முடிந்த பின் சண்டை கூண்டிற்குள் இரண்டு வீரர்களும் நடுவரும் நின்று கொண்டிருந்தபோது, கோனர் மெக்கிரகரின் பயிற்சியாளரும், நண்பர்களும் வெளியிலிருந்து ஹபீபை மத ரீதியாக இழிவாக திட்டி வெளியே சண்டைக்கு வருமாறு அழைத்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஹபீப் கூண்டிலிருந்து வெளியே குதித்து கோனர் மெக்கிரகரின் பயிற்சியாளர், நண்பர்களை தாக்கினார். இதற்கிடையே ஹபீபின் பயிற்சியாளரும், உறவினரும் கூண்டுக்குள் குதித்து கோனர் மெக்கிரகரை அடித்தனர்.

இதனால் யு.எப்.சி போட்டி அரங்கம் போர்க்களமாக காட்சியளித்தது. இறுதியில் ஹபீபின் பயிற்சியாளர், உறவினரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தோல்வியால் அவமானமடைந்த கோனர் மெக்கிரகர் செய்தியாளர் சந்திப்பை எதிர்கொள்ள முடியாமல் ஓடி ஒளிந்துகொண்டார். இதையடுத்து ஹபீப் தரப்பில் எந்த தவறும் இல்லை என்பதால் அவரது பயிற்சியாளர் மற்றும் உறவினரை போலீசார் விடுவித்தனர்.

இந்த விவகாரம் உலகளவில் மிகப்பெரும் விவாத பொருளாகியுள்ளது. பல்வேறு தரப்பினர் ஹபீபுக்கு ஆதரவாகவும், கோனர் மெக்கிரகருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆக்கம்: அதிரை பிறை செய்திக்குழு